| ADDED : ஜன 22, 2024 05:31 AM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி நிறுமச் செயலாண்மை துறை சார்பில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையிலான பல்திறன் போட்டிகளில் அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.நிகழ்ச்சிக்கு சவுராஷ்டிரா கல்லுாரி தலைவர் மோதிலால் தலைமை வகித்தார். செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார்.பொருளாளர் பாஸ்கர், நிர்வாககுழு உறுப்பினர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முதல்வர் ரவீந்திரன், துணை முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.தமிழகம் முழுவதும் 45 கல்லுாரிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் குழு நடனம், இசை நடனம், புதையல் வேட்டை, கோலப் போட்டி, முக ஓவியம், புகைப்படம் எடுத்தல், தனித்திறமை, விளம்பர நடிப்பு, ஆடை அலாங்கார அணி வகுப்பு போட்டிகளில் பங்கேற்றனர்.அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரைக் கல்லுாரி, லேடி டோக் கல்லுாரி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது. வர்த்தக கண்காட்சியும் நடந்தது. துறைத் தலைவர் நளினா, பேராசிரியர்கள் பாண்டியராஜன், சின்னத்துரை, சுப்புலட்சுமி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.