உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாடக மேடையில் அங்கன்வாடி மையம்

நாடக மேடையில் அங்கன்வாடி மையம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி ஒட்டுப்பட்டியில் தனிக்கட்டடம் இல்லாததால், நாடக மேடையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கிருந்த மைய கட்டடம் பழுதானதால் ஓராண்டுக்கு முன் வாடகை கட்டடத்திற்கு மாற்றினர். பின் கட்டடம் சாலையோரத்தில் பாதுகாப்பின்றி இருந்ததால் கிராம மந்தையில் உள்ள நாடக மேடைக்கு மாற்றப்பட்டது. ஓராண்டாக நாடக மேடையில் 20 குழந்தைகளுடன் செயல் படுகிறது. மேடையின் பெரும் பகுதியை கம்பி வேலி, கட்டுமான பணிகளை மறைக்கும் பச்சைத் துணியால் 5 அடி உயரத்திற்கு மூடியுள்ளனர். இதன் இடைவெளியில் வெயில், மழைநீர் உள்ளே பாய்கிறது. கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பகுதியை சுற்றி மாட்டுத் தொழுவம் உள்ளதால், அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. நாய்கள், விஷப் பூச்சிகள் உள்ளே வருகின்றன. அடிப்படை வசதிகள் இன்றி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பழுதான கட்டடத்தை மாற்றி புதிதாக கட்ட அனுமதி பெற்று ஓராண்டாகியும் பணிகள் துவங்கவில்லை. ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி