உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை எதிர்ப்பு மையம்

போதை எதிர்ப்பு மையம்

திருமங்கலம்; திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம் செயல்பாடு தொடங்கப்பட்டது. தாலுகா எஸ்.ஐ., சுதன் தலைமை வகித்தார். ஏட்டு சவுந்திரபாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதை தடுக்கும் நடவடிக்கைகள், ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் பங்களிப்பு குறித்து எஸ்.ஐ., பேசினார். இதையடுத்து மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை