உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தென்கரையில் ஆராட்டு விழா

 தென்கரையில் ஆராட்டு விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோயில் சார்பில் வைகையில் ஆராட்டு விழா நடந்தது. விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை, பக்தர்கள் சங்கல்பம், யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. விநாயகர், கருப்பணசாமி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கலசாபிஷேகம் நடந்து, ஐயப்பன் யானை வாகனத்தில் வைகை ஆற்றுக்குச் சென்றார். சுவாமிக்கு பலவகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தென்கரை, முள்ளிப்பள்ளம் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !