உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்கை கால் வழங்கல்

செயற்கை கால் வழங்கல்

மதுரை, : மதுரை மாட்டுத்தாவணியில் சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பின் மாவட்ட கமிட்டி சார்பில் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தேசிய துணைத் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத் தலைவர்சி.ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வம் வரவேற்றார்.விருதுநகர், தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நால்வருக்கு ராஜேஷ் குடும்பத்தினர் செயற்கை கால்கள் வழங்கினர். வழக்கறிஞர் பிரீத்தி, அமைப்பு நிர்வாகிகள் ஜி.பி.ரத்தினசாமி,முத்துரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.உதவித் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் சக் ஷம் அமைப்பை 93630 32998 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ