மேலும் செய்திகள்
குழந்தைகள் இல்லாத அங்கன்வாடி
23-Aug-2025
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி 14வது வார்டு திடீர் நகர் அங்கன்வாடி மையம் 13வது வார்டு நாட்டாமைக்கார தெருவில் உள்ளது. இம்மையம் கடந்த 13 ஆண்டுகளாக இட நெருக்கடியான வாடகை 'ஸ்பெஸ்டாஸ் ஷீட்' கட்டடத்தில் செயல்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இங்கு காற்றோட்ட வசதி இன்றி சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். ஒரே அறையில் மாணவர்களும், அவர்களுக்கு தேவையான உணவு மூடைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் ஓடி விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியாக உள்ளது. கழிப்பறை இல்லாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். திடீர் நகருக்கும் மையம் செயல்படும் பகுதிக்கும் துாரம் அதிகம் என்பதால் பெற்றோர் குழந்தைகளை அழைத்து வர தயங்குகின்றனர். குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே திடீர் நகர் பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
23-Aug-2025