உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இணை இயக்குநர் ஆய்வு

இணை இயக்குநர் ஆய்வு

மதுரை : தோட்டக்கலைத்துறை சார்பில் மேலுார் பூஞ்சுத்தி பண்ணை, திருப்பரங்குன்றம் மலர்கள் மகத்துவ மையத்தை இணை இயக்குநர் நாகராஜன் ஆய்வு செய்தார். ஆய்வு குறித்து துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: பூஞ்சுத்தியில் மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி பழமரக் கன்றுகள், மூலிகைச் செடிகள், வனமரக் கன்றுகள், அழகுத்தாவரச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய மலர்ச்செடிகள், அழகுத்தாவர செடிகள் விற்கப்படுகின்றன.இரு இடங்களிலும் மண்புழு உற்பத்தி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள், டிரைகோ டெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றார்.உதவி இயக்குநர்கள் ஸ்ரீமீனா, கோகிலாசக்தி, புவனேஸ்வரி, தோட்டக்கலை அலுவலர்கள் நந்தினி, பபிதா ராணி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை