உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அத்திபட்டி ஊராட்சி அவலம்

அத்திபட்டி ஊராட்சி அவலம்

பேரையூர் : சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டி - சாப்டூர் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சார இணைப்பு, பராமரிப்பு இன்றி முட்புதர் மண்டி பூட்டப்பட்டுள்ளது.அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால் கட்டுமானம் சிதிலம் அடையும் நிலையில் உள்ளது. சேடப்பட்டி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
ஏப் 07, 2025 11:23

சேடப்பட்டி ஒன்றியத்தை இதுவரை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை உதாரணத்திற்கு 1.சேடப்பட்டி சட்டமன்றத்தொகுதி உசிலம்பட்டி சட்டமன்றத்தொகுதியானது அதனால் சேடப்பட்டி, தொகுதி அந்தஸ்தைஇழந்தது. 2. எழுமலை மல்லப்புரம் முதல் மயிலாடும்பாறை வரையிலான மலை சாலையில் அரசு பேருந்து போக்குவரத்து நடைபெற அரசு முயற்சிக்கவில்லை. 3. சேடப்பட்டி ஒன்றியத்தில் சொல்லும் படியான தொழிற்சாலைகள் ஏதும் இல்லை 4. இந்த பகுதியானது மழை மறைவுப்பகுதியாக உள்ளதால் சரியான விவசாயமே நடைபெறுவதில்லை. நீர்பாசனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அய்யனார் கோயில் தடுப்பணை திட்டம் நிறைவேற்றபடவேயில்லை. எனவே சேடப்பட்டி பகுதியை சிறப்பு கவனம் செலுத்தி வளர்ச்சி அடைய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை