உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா

தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா

மதுரை : தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு (சி.இ.டி.ஓ.ஐ.,) சார்பில் தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா மதுரை சூர்யாநகரில் உள்ள 'த்வாத சாந்தம் கன்வென்ஷன்' சென்டரில் அக். 19 மதியம் 3:00 மணி முதல் நடக்க உள்ளது.இதுகுறித்து அமைப்பு சேர்மன் ரியாஸ் கூறியதாவது: இவ் விழாவில் தென் மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 1500 தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.அமைச்சர் மூர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., விழாவை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், அஞ்சப்பர் நிர்வாக இயக்குநர் இந்திரா கந்தசாமி, நேச்சுரல்ஸ் சலுான் சி.இ.ஓ., குமாரவேல், கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.நிகழ்ச்சிகளை மதுரை ஜிகர்தண்டா, தீன் பிளை டோர்ஸ் கேட்வே ஹவுசிங், ஐ.இ.எம்.எக்ஸ்., ஒயில் பொட்டிக், டக்கர் இ.வி. சார்ஜர்ஸ், ஹெவன்ஸ் பார்க் ரெஸ்டாரன்ட், நிஷா பீடா, யுவராஜ் பட்டாசுகள், கிராண்ட் இன்டீரியர்ஸ், டிராவல் மேட், வந்தேமாதரம் நடனப்பள்ளி, ஜெய்ஹிந்த் போட்டோகிராபி இணைந்து வழங்குகின்றன என்றார். பெர்பெக்ட் அட்வர்டைசிங் நிர்வாகி பிரபு ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை