உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

மதுரை ; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் வைகை வடகரை ஆழ்வார்புரம் அமைப்பின் ஆண்டு விழா நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், ஆசிரியருக்கும், சமூக ஆர்வலருக்கும் விருது வழங்கும் விழா எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.சிறப்பு விருந்தினராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜமாணிக்கம், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ்,பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா, சமூக ஆர்வலர் அசோக்குமார், ஆசிரியர்கள் செல்வராஜ், உலகராஜ், சிவா, காட்வின், சூர்யமூர்த்தி, கார்த்திகேசன், சரவணன், மணிமாறன், சுப்பு லெட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை