அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு
மதுரை: மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் (மாபிப்), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (எம்.எஸ்.எம்.இ.,) அமைச்சகம் சார்பில் மதுரை வேளாண் கல்லுாரியில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.சி.இ.ஓ., கணேஷ்மூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் தொழில் வளர்ச்சி இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் மகேந்திரன், சமூக அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா, எம்.எஸ்.எம்.இ., டி.எப்.ஓ., துணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, புவிசார் குறியீட்டு திட்ட அலுவலர் சஞ்சய் காந்தி துவக்கி வைத்தனர். மேலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.தொழில்முனைவோர்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். புவிசார் குறியீடு, வணிக முத்திரை, காப்புரிமையின் முக்கியத்துவம், அவற்றை பதிவு செய்யும் வழிமுறை குறித்து நிபுணர்கள் விளக்கினர்.