உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரிசெலுத்துவோருக்கான விழிப்புணர்வு முகாம் துவக்கம்

வரிசெலுத்துவோருக்கான விழிப்புணர்வு முகாம் துவக்கம்

மதுரை : மதுரையில் வருமான வரித்துறை சார்பில் பட்டய கணக்காளர், சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், மூத்தகுடிமக்கள், சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவுத்துறையினர், பங்குதாரர்கள் உட்பட பல்வேறு துறையினருக்கான விழிப்புணர்வு 'டாக்ஸ் பேயர் ஹப்' எனும் வரிகுறித்த விழிப்புணர்வு முகாம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.மதுரை தமுக்கம் மைதானம் கூட்ட அரங்கில் இன்று காலை 10:30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் எச்.பி.கில் தலைமை வகிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மதுரை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சஞ்சய்ராய், முதன்மை கமிஷனர் வசந்தன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஜன.31 வரை நடைபெறும் இம்முகாமில் தொழில், வர்த்தக சங்கங்கள், பட்டய கணக்காளர்கள், பார் அசோசியேஷன், சுயஉதவி குழுவினர் உட்பட பலரும் பங்கேற்கின்றனர்.இதில் வரித்துறையில் உள்ள உளவுப்பிரிவு, குற்றப்புலனாய்வு, வரிவிலக்கு பிடித்தம், விலக்குகள் மற்றும் புலனாய்வு தொடர்பான கருத்தரங்குகளும் இடம்பெற உள்ளது.வரிசெலுத்துவோரின் குறைகள், பணத்தை திரும்ப பெறுவதில் தாமதம், மின்சரிபார்ப்பு சிக்கல்கள் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். கல்வி, தகவல், குறைதீர்வுக்கென தனிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விளக்கங்களை பெறலாம். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் வருமான வரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கேள்விபதில் நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை