மேலும் செய்திகள்
வேளாண் கூடுதல் இயக்குநர் ஆய்வு
16-Oct-2024
மதுரை : துாய்மை இந்தியா, கதர் கிராம கைத்தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) சார்பில் கதர் மற்றும் கைத்தொழில்களின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மதுரையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் முடிவில் காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் கே.வி.ஐ.சி., இயக்குநர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவன இயக்குநர் பிரகலாதன் துாய்மை பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு காந்தி நினைவு நிதி பொருளாளர் உறுமத்தான், இயக்குநர் ஆண்டியப்பன், செயலாளர் சரஸ்வதி, பேராசிரியர்கள் கண்ணன், சுரேஷ் கண்ணா, வனம், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மயில், கே.வி.ஐ.சி., சர்வோதயா பணியாளர்கள் கலந்து கொண்டனர். காப்பாட்சியர் நடராஜன், ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் ஒருங்கிணைத்தனர்.
16-Oct-2024