உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

எழுமலை: எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளி, மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மதுரை வடமேற்கு ரோட்டரி கிளப் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் ஆறுமுகசுந்தரி வரவேற்றார். தாளாளர் பொன்கருணாநிதி துவக்கி வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி அருள்குமார், மாவட்ட நல அலுவலர் காந்திமதி, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கவுன்சிலர் ஷோபனாகுமார், ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் ஆனந்தஜோதி, துணை கவர்னர் சுபாபிரபு, நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் மகாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை