உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சூரிய மின் திட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்

சூரிய மின் திட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்

திருமங்கலம் : கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் மேற்கூரை சூரியசக்தி குறித்த விளக்கக் கூட்டம் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் நடந்தது. கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா வரவேற்றார். மாநில தொழில்துறை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா பங்கேற்று பேசியதாவது: தொழிற்சாலைகளின் கூரைகளில் சூரிய மின் கலன்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், சிறு. குறுந்தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்து கொள்வது இத்திட்டம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி பொருள்களுக்கான செலவு குறையும். தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கலெக்டர் பிரவீன் குமார் பேசியதாவது: இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் அமைப்புகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் புதுப்பிக்கத் தக்க எரிசக்திகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றன. ஒரு கோடி வீடு களுக்கு சூரிய மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் சூரிய மின் உற்பத்தியில் 10வது இடத்தில் உள்ளது. வீடுகளில் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ வாட் சூரிய மின் உற்பத்திக்கு ரூ. 30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே மதுரை மாவட்டத்தை முத லிடத்தில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றார். செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை