உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மகளிர் மேம்பாட்டுக் குழு, வி.எஸ்.ஆர். பல்துறை சிறப்பு மருத்துவமனை கருத்தரிப்பு மையம் சார்பில் பெண்கள் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது . மாணவி ஹரிணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். வி.எஸ்.ஆர் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அருண் பிரசாத், மகளிர் மருத்துவ நிபுணர்கள் அனுஷா ராவில்லா, மங்கள லட்சுமி பேசினர். விஷ்ணு சுபா, பரிமளா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ