விழிப்புணர்வு கருத்தரங்கு
வாடிப்பட்டி: டிப்பட்டியில் தமிழ்நாடு வ.உ.சி., இளைஞர் பேரவை சார்பில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பேரவை ஒன்றிய மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் வெற்றிவேலன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்சியாளர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார். மாநிலத் தலைவர் மின்னல், பொருளாளர் ராஜன், மகளிர் விழிப்புணர்வு குறித்து பேசினர். மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சியாளர் முருகேஸ்வரி இயற்கையாக தயார் செய்யப்பட்ட ஆடைகள் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.