உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: மதுரையில் உணவு பாதுகாப்புத் துறை, மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில், 'உணவு பாதுகாப்பு உடல் நலத்திற்கான பாதுகாப்பு' எனும் தலைப்பில் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. ஓட்டல்களில் அசைவ உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினமோட்டோவின் விளைவு, சேர்க்கப்படும் நிறமிகள், கலப்படங்கள், வடை, பஜ்ஜி சுட பயன்படுத்திய எண்ணெய் மறு உபயோகம், அரசின் அபராதம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரமோகன் விளக்கமளித்தார். பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார். பொருளாளர் அழகுபாண்டியன், நிர்வாகிகள் ராமநாதன், பாலு, கார்த்திகேயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி