உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மேலுார் : மேலுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் புவனேஸ்வரி பதினெட்டாங்குடியில் மா பயரில் கவாத்து செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இம் முகாமில் வேளாண் கல்லுாரி இணைப் பேராசிரியர் அருளரசு மா மரத்தில் கவாத்து செய்யும் முறை, காலங்கள், கிளைகள் தேர்வு, கவாத்து செய்த பிறகு மரத்தை பராமரிப்பது மற்றும் உரமிடுதல் குறித்து செயல் விளக்கம் செய்தார். விவசாயிகளின் கேள்விகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜசேகர் விளக்கம் அளித்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி அலுவலர்கள் நிறைமதி, அழகு பாண்டியன், அகிலன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை