உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேட்மின்டன் அகாடமி திறப்பு

பேட்மின்டன் அகாடமி திறப்பு

நாகமலை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில், எஸ்.டி.அரசகுமார் பேட்மின்டன் அகாடமி திறப்பு விழா, கல்லுாரித் தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் நடந்தது. உடற்கல்வி இயக்குநர் குமார் வரவேற்றார். மாணவர்கள் பேட்மின்டன் விளையாட்டில் திறன்களை மேம்படுத்தி, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட புதிய பேட்மின்டன் அகாடமியை நாடார் மஹாஜன சங்கம் பொதுச் செயலர் கரிகோல்ராஜ் திறந்து வைத்தார். சர்வதேச பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஜெயரட்சம், மாணவர்களுக்கு பயிற்சி, ஆலோசனைவழங்கினார். கல்லுாரி தாளாளர் சுந்தர், துணைத் தலைவர் பாண்டியன், இணைச் செயலர் பாலமுருகன், பொருளாளர் தவமணி, முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, துணை முதல்வர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அன்பரசன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் மணிமாறன், உடற்கல்வி பேராசிரியர்கள் பார்த்திபன், ஜெயபால் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி