களைக்கொல்லிக்கு தடை
மதுரை: மதுரை மாவட்டத்தில் ‘பராகுவாட் டைகுளோரைட்’ களைக்கொல்லி தடை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் வாங்கக்கூடாது என வேளாண்மை துணை இயக்குநர் ராணி தெரிவித்தார். களைகளை கட்டுப்படுத்த பராகுவாட் என்னும் களைக்கொல்லியை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அதன் அதிக நச்சுத்தன்மை காரணமாக மத்திய அரசு அதை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். கடைகளில் இருப்பில் உள்ள இக்களைக்கொல்லியை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.