உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பரோட்டா பறிமுதல்

பரோட்டா பறிமுதல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி உணவகங்கள், பேக்கரிகள், தனியார் மதுபான பார்களில் நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசந்திரன், சுகாதார பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பல கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த பழைய பரோட்டாக்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். தனியார் மதுபான பார்களில் தடைசெய்த பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தடைசெய்த பிளாஸ்டிக், காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை