உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்நீதிமன்றத்தில் பேட்டரி கார் துவக்கம்

உயர்நீதிமன்றத்தில் பேட்டரி கார் துவக்கம்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பேட்டரி கார்கள் துவக்க விழா நடந்தது.நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ரூ.12 லட்சம் மதிப்பிலான இரு பேட்டரி கார்களை பதிவாளர்கள் அப்துல் காதர் (நீதித்துறை), பிரேம்குமார் (நிர்வாகம்) துவக்கி வைத்தனர். ஒரு காரில் ஒரே நேரத்தில் 11 பேர்வரை பயணிக்கலாம். நீதிமன்றத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், நீதிமன்ற அலுவலர்கள் பிரதான நுழைவு வாயிலில் இருந்து காந்தி சிலைவரை இலவசமாக பயணிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ