மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் தயாராகும் ஜல்.. ஜல்... சலங்கை
12-Dec-2024
கொட்டாம்பட்டி : பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு மாடுகளுக்கு அலங்காரம் செய்ய தயாரிக்கப்படும் மணிகள் விற்பனை கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் களை கட்ட துவங்கி உள்ளது.உழவுக்கும், உழைக்கும் மாட்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக கொண்டாடும் விழா பொங்கல் பண்டிகை. இதையொட்டி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும்.இதில் பங்கேற்கும் மாட்டை அலங்கரிப்பதில் மணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சலங்கையை கொட்டாம்பட்டி செர்தபாண்டி 32, தயாரித்து விற்பனை செய்கிறார்.அவர் கூறியதாவது: 9 முதல் 11 எண்ணிக்கை வரையான வெண்கல மணிகள் ரூ.2 ஆயிரம், சில்வர் ரூ. ஆயிரத்து 800க்கும், அரியக்குடி மணிகள் ரூ. 9 ஆயிரம் வரையும் விற்கிறேன். உழவு, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மணியை கட்டுவதால் மங்கலமான மணி சத்தத்தில் மாடுகள் உற்சாகமாக ஓடும்.குறைந்த விலையில் தரமாக செய்வதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.ஆண்டு முழுவதும் 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, ஆர்டர் கொடுக்கும் மணிகளை நேரில் சென்று கொடுக்கிறேன். கால், கழுத்து மணிகள் தவிர மூக்கணாங்கயிறு, திருகாளி, பிடி கயிறும் தயாரித்து விற்பனை செய்கிறேன். பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் ம(ப)ணிகளை செய்வதால் மனநிறைவாக உள்ளது என்றார்.
12-Dec-2024