உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பாரதியார் நினைவு தினம்

மதுரையில் பாரதியார் நினைவு தினம்

மதுரை: பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள சிலைக்கு தமிழக அந்தணர் வாழ்வுரிமை கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஹரிஹரசுப்பிரமணியன், வெங்கடகிருஷ்ணன், சூரிய நாராயணன், சிவராமன், மீனாட்சிசுந்தரம், நாகராஜன், ரங்கராஜன், ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * பள்ளி சார்பில் செயலாளர் பார்த்தசாரதி, மதுரைக் கல்லூரி வாரியப் பொருளாளர் ஆனந்த சீனிவாசன், வாரிய உறுப்பினர் இல. அமுதன், தலைமை ஆசிரியர் நாராயணன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். பாரதியார் பாடல்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு பாரதியின் பேரன் ராஜ்குமார் பாரதி மற்றும் பாரதி சிந்தனை மன்றம் சார்பில் லட்சுமி நாராயணன் பரிசு வழங்கினர். * ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் பாரதியார் படத்திற்கு தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். பொருளாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் காளிதாசன், சங்கரய்யா, குப்புசாமி, ராமகிருஷ்ணன், பாஸ்கர பாண்டி, துளசிதாஸ், கந்தராஜ், சின்ராஜ், மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர். பாண்டியன் நகர் பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு முற்போக்கு கவிஞர் பேரவை நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை