உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். அரசு பஸ்களை அரசே இயக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனரை நியமிக்கக்கூடாது. போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்கி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2023 மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கான பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மண்டல பொதுச்செயலாளர்கள் லட்சுமணன், போத்திராஜ், ராமமூர்த்தி, போக்குவரத்து தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் பாலன், துணை பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை