உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

மதுரை: மதுரை காங்., அலுவலகத்தில் நகர் நிர்வாகிகள் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ராஜிவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, கவுன்சிலர்கள் முருகன், போஸ், துணைத் தலைவர்கள் பாலு, சுப்பையா, வெங்கட்ராமன், மகளிரணி நிர்வாகிகள் ஷானவாஸ் பேகம், நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உசிலம்பட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் வட்டார தலைவர்கள் சேடபட்டி புதுராஜா, ஜெயராஜ், செல்லம்பட்டி செந்தில், முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை