மேலும் செய்திகள்
பா.ஜ., முகவர்களுக்கு பயிற்சி முகாம்
10-Nov-2025
மதுரை: மதுரை நகர் பா.ஜ., தலைவர் மாரி சக்ரவர்த்தி, தனது தாயார் ராஜேஸ்வரி பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகனிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், 'கடந்த தேர்தலில் ஓட்டளித்த எனது தாய் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க.,தான் காரணம். இதுபோன்ற காரணங் களுக்காக சிறப்பு தீவிர திருத்தம் தேவை'' என்றார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், கண்ணன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் குரு ரமேஷ்குமார், துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லில்லி, கருடகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு பஷீர் அகமது உடனிருந்தனர். பா.ஜ., பயிலரங்கம் தபால்தந்தி ரோடு பகுதியில் பா.ஜ.,வின் மதுரை வடக்கு தொகுதி ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. தொகுதி அமைப்பாளர் மாரிசக்கரவர்த்தி, இணை அமைப்பாளர் கண்ணன், பொறுப்பாளர் ஸ்ரீவாசன், மண்டல் தலைவர்கள் வெங்கடேசன், மணிகண்டன், சத்யா, சீதா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சக்திகேந்திரா பொறுப்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
10-Nov-2025