உயர்நீதிமன்ற கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்திற்கு இ மெயில் மூலம் செப்., 26 ல் தகவல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் சோதனையில் அது புரளி என உறுதியானது. நேற்று மீண்டும் உயர்நீதிமன்றக் கிளை நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை. பின் புரளி என உறுதியானது. வழக்கம் போல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்தன.