காந்தி மியூசியத்தில் நுால் வெளியீடு
மதுரை,: மதுரை காந்தி மியூசியத்தில் சர்வோதய, காந்திய இயக்கத்தின் மூத்த தலைவர் நடராஜன் நினைவு நாளை முன்னிட்டு நுால் வெளியீடு, விருது வழங்கும் விழா நடந்தது.காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில் நாதன் தலைமை வகித்தார். சர்வோதய மண்டலத் தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.பேராசிரியர்கள் முத்துலட்சுமி, ராமலிங்கம் தொகுத்துள்ள 'க.மு.ந.வின் நினைவலைகள்' நுாலை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வெளியிட முதல் பிரதியை ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி பெற்றார்.நுாலகர் ராமகிருஷ்ணன், இயற்கை விவசாயி ஆபிரகாமுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.காப்பாட்சியர் நடராஜன் தொகுத்து வழங்கினார். மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், செயலாளர் நந்தாராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.