பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம்
மேலுார் : பதினெட்டாங்குடியில் கிராம அம்பலக்காரர்கள் மற்றும் ஜாலி பாய்ஸ் அமைப்பின் சார்பில் சாரதி தமிழ்மணி நினைவாக மாட்டுவண்டிப் பந்தயம் நடந்தது.பெரிய மாடு பந்தயத்தில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பதினெட்டாங்குடி ஹன்சிகா மோனிஷ், அயிலாங்குடி மலைச்சாமி, பரவை சோணைமுத்து, பாகனேரி ஆனந்த பார்த்திபன் மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடந்தது. பாகனேரி புகழேந்தி, ஒத்தப்பட்டி பரமசிவம் முதல் பரிசு, நரசிங்கம்பட்டி ராமசாமி, எட்டிமங்கலம் பங்கஜம் இரண்டாம் பரிசு, பரவை சோணை முத்து, கள்ளந்திரி சிவபிரபு மூன்றாம் பரிசு, தேவாரம் செல்வம் ராஜன், பதினெட்டாங்குடி நிகிலேஷ் மாடுகள் நான்காம் பரிசை வென்றன.