திடீர் சத்தத்துடன் பஸ் ‘பிரேக் டவுன்’
மதுரை: அழகர்கோவிலில் இருந்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு இன்று (அக்.,28) ஒரு அரசு தாழ்தள டவுன் பஸ் சென்றது. தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதி ஸ்டாப்பில் நின்றது. அங்கிருந்து கிளம்பியதும், பஸ்சின் அடிப்பகுதியில் இருந்த ஏர் சஸ்பென்ஷன் எனப்படும் காற்றழுத்தத்தில் இயங்கும் பலுான் போன்ற ‘ஷாக் அப்சார்பர்’ திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். முறையான பராமரிப்பின்றி பஸ்களை இயக்குவதே இதற்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டினர்.