மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல் தண்டனை
24-Apr-2025
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் நெல்லுார் அக்னிஹாசன்53, பாண்டித்துரை34, புலியராஜக்காபட்டி ஜெயசீலன்34. இவர்கள் 2023 ல் வேன், டூவீலர்களில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் 45 கிலோ கஞ்சா கடத்தியபோது மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மூன்று பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
24-Apr-2025