கஞ்சா பறிமுதல் தண்டனை
மதுரை:தேனி மாவட்டம் உத்தமபுரம் ராஜா 46, சிவமணி 47. ஒரு காரில் 240 கிலோ கஞ்சாவை 2011 ல் கடத்தியபோது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.