உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு

மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு

மதுரை : மதுரை மதன்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி உள்ளிட்ட 16 ஊராட்சிகள், பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை (தேர்தல் பிரிவு) டிச.31 ல் அரசாணை பிறப்பித்தது. விதிமுறைகளை பின்பற்றவில்லை. அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு அதிகாரம் இல்லை. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் பிறப்பித்தது ஏற்புடையதல்ல. ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மாநகராட்சி தரப்பு: அரசிடம் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து முன்கூட்டியே இங்கு மனு செய்தது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி பிப்.7 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !