உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓ.டி.பி.,க்கு தடை கோரி வழக்கு

ஓ.டி.பி.,க்கு தடை கோரி வழக்கு

மதுரை : மதுரை தங்கமாரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளும் சேவைகள் சரிபார்ப்பிற்கு ஓ.டி.பி., எண்ணை மக்களிடம் கோருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஓ.டி.பி., எண் பெறாமல் எந்த ஆன்லைன் சேவையும் நடைபெறாது. இதற்கு சட்டப்படி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை தெளிவுபடுத்தி வழக்கு தாக்கல் செய்யலாம். பொத்தாம் பொதுவாக விளம்பர நோக்கில் வழக்கு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ