உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீர்த்தக்காட்டில் வசதிகள் செய்யக்கோரி வழக்கு

தீர்த்தக்காட்டில் வசதிகள் செய்யக்கோரி வழக்கு

மதுரை; மதுரை முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் 308 குடும்பங்கள் உள்ளன. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தெரு விளக்கு இல்லாததால் இரவில் திருடர்கள், சமூக விரோதிகளின் தொல்லை உள்ளது.அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மதுரை கிழக்கு தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை