மேலும் செய்திகள்
குவாரி விதிமீறல் வழக்கு
22-Nov-2024
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாணிக்கங்கோட்டை சதாசிவம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தேவகோட்டை-வட்டாணம் சாலையிலிருந்து மாணிக்கங்கோட்டைக்கு மணிமுத்தாறு நதியை கடந்து செல்லவேண்டும். ஏற்கனவே இருந்த தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.62 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இதை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளி பயன்படுத்துகிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்துகிறது. விசாரணை நடத்தி அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பில் தொகையை பட்டுவாடா செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.18க்கு ஒத்திவைத்தது.
22-Nov-2024