உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : தமிழகத்தில் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள கட்டடங்களை அகற்ற தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பல கட்டடங்கள் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளன. ஆபத்தான சூழலில் அதனை பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலருகே அதற்குரிய போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அக்கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அக்கட்டடத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளன.மழைக்காலம் துவங்க உள்ளது. பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையிலுள்ள கட்டடங்களை அகற்ற தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். தமிழக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர்கள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ