கால்வாய்களை சீரமைக்க வழக்கு
மதுரை :
கால்வாய்களை சீரமைக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மேலுார் எட்டிமங்கலம் வழக்கறிஞர் ஸ்டாலின். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கள்ளந்திரி முதல் குறிஞ்சிப்பட்டி வரை முல்லைப் பெரியாறு பிரதான மற்றும்உப கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் சென்றடைவதில்லை. விவசாயம் பாதித்துள்ளது. மராமத்து பணிக்கு ரூ.2.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. பணி துவங்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு மதுரை கலெக்டர்,பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.