உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மதுரை; மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் படித்து டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற 25 பேர், வி.எப்.எக்ஸ்., 3டி தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற 16 மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை நுாலகர் தினேஷ்குமார் வரவேற்றார்.மாணவர்களுக்கு கலெக்டர் சங்கீதா சான்றிதழ் வழங்கி பேசுகையில், ''அரசு பணியிலும் நிறைவான சம்பளம் கிடைக்கும். தேர்வில் வென்றதும் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தயாராக வேண்டும். தனியார் போன்று அரசுப்பணியும் கடினமானது. இரவு 8:00 மணி வரை வேலை செய்யும் நிலையும் உள்ளது'' என்றார். துணை முதன்மை நுாலகர் சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை