உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் நாளை செஸ் போட்டி துவக்கம்

மதுரையில் நாளை செஸ் போட்டி துவக்கம்

மதுரை : முதல்வர் கோப்பை மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நாளை (அக். 17) மதியம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.அக். 17 முதல் 19 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனிப்பிரிவு செஸ் போட்டிகளும் அக். 20 முதல் 22 வரை கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 38 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளின் ஆடவர், மகளிர் போட்டியில் பங்கேற்கின்றனர். பிற மாவட்ட வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை