உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் கோப்பை மகளிர் தடகளப் போட்டி

முதல்வர் கோப்பை மகளிர் தடகளப் போட்டி

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவிகளுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை தடகள போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. போட்டி முடிவுகள் : 100 மீட்டர் ஓட்டத்தில் சென்னை சுபதர்ஷினி முதலிடம், நாமக்கல் கிருத்திகா 2ம் இடம், திருப்பூர் ஏஞ்சல் சில்வியா 3ம் இடம் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் சென்னை சுபதர்ஷினி முதலிடம், ஏஞ்சல் சில்வியா 2ம் இடம், மதுரை சாய் சம்யுக்தா 3ம் இடம் பெற்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் சென்னை தேசிகா வெங்கடேசன், திருச்சி அக்ஷயாஸ்ரீ, ராமநாதபுரம் செனிலியா, 1500 மீட்டர் ஓட்டத்தில் கோவை ஹேமதி, திருச்சி ஸ்வாதி, சென்னை லதா, 3000 மீட்டர் ஓட்டத்தில் லதா, ஹேமதி, திண்டுக்கல் மித்ரா முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் சென்னை ஸ்ரீரேஷ்மா, செங்கல்பட்டு அக்ஸிடா, திருநெல்வேலி மகுடீஸ்வரி, நீளம் தாண்டுதலில் சேலம் அபிநயா, திருப்பூர் பவீனா, தர்மபுரி பவதாரணி, உயரம் தாண்டுதலில் சென்னை கிஜி, துாத்துக்குடி சகானா, திண்டுக்கல் தனுசியா முதல் மூன்று இடங்களை வென்றனர். குண்டு எறிதலில் திருப்பூர் வைஷ்ணவி, ராமநாதபுரம் மதுமிதா, சென்னை மெர்லின் ஹன்னா, வட்டு எறிதலில் கோவை அனுஸ்ரீ, சென்னை ஷாலு ரெகானா, செங்கல்பட்டு ஜென்சி சூசன் முதல் மூன்று இடங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !