உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

சேற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

திருமங்கலம் : கள்ளிக்குடி தாலுகா உலகாணியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 31. இவரது மனைவி சுவாதி. இரு குழந்தைகள் உள்ளனர்.மூத்த மகன் ஆதீஷ்குமார் 2, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வந்ததால் மாடுகளை பிடித்து வீட்டின் பின்பக்கம் சுவாதி கட்டச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஆதிஷ்குமாரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கூடக்கோவில் போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து 500 மீட்டர் துாரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத ஓடை சகதியில் கால்கள் சிக்கி அழுதுகொண்டிருந்த ஆதிஷ்குமாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை