மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
மதுரை : மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி சார்பில் மாநில கராத்தே போட்டி மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்தது.கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், முதல்வர் சீனிவாசன், சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளி முதல்வர் கவிதா போட்டியை துவக்கி வைத்தனர். தலைமை பயிற்சியாளர் ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமை நடுவராக தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, நடுவர்களாக ராஜா, முத்துகிருஷ்ணன், கார்த்திக், அஜய் கிருஷ்ணா, தினேஷ்குமார் செயல்பட்டனர்.இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர். சாய் ராம், டாம் குரூஸ் பிரபு, அர்ச்சனா, தர்ஷனாஸ்ரீ தர்ஷித், தர்ஷிகா, ஸ்ரீகிருஷ்ணா, திலக் தரண் ஆகியோர் கட்டா பிரிவில் முதல் பரிசு பெற்றனர். சண்டை பிரிவில் அத்தாவுல்லா இப்ராஹிம், முகமத் தாஜுதீன் முதல் பரிசு பெற்றனர். கட்டா பிரிவில் தாரிகா, அஸ்வந்த், அவந்திகா 2ம் பரிசும், விமல் கிருஷ்ணன், ஜோதி வேலன், சாய் கிஷோர் 3ம் பரிசு பெற்றனர்.சிவில் இன்ஜினியர் சங்க துணைத் தலைவர் மணிகண்டன், ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி தலைவர் நிஷாராணி, செயலாளர் ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினர்.
27-Jan-2025