| ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
திருநகர் : மதுரை திருநகர் ஹாக்கி கிளப் ஆண்டு விழாவை முன்னிட்டு டைட்டல் வேர்ல்டு சார்பில் நடந்த இன்ட்ரா கிளப் ஹாக்கி போட்டிகளில் கோல் ஹண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.திருநகர் அண்ணா பூங்காவில் மூன்று நாட்கள் போட்டிகள் நடந்தன. இக்கிளப்பில் பயிற்சி பெற்றோர், வேலை வாய்ப்பு பெற்றோர், தற்போதைய பயிற்சி வீரர்கள் 120 பேர் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.லீக் முறையில் நடந்த பத்து போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற கோல் ஹண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.டிராகன் பாய்ஸ் அணியினர் 2ம் இடம், ட்ரிபிளர்ஸ் அண்டு டாக்லர்ஸ் அணி 3ம் இடம், பேட்டில் வாரியர்ஸ் அணி 4ம் இடம், டிபன்டர்ஸ் அணி 5ம் இடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவில் மதுரை கஸ்டம்ஸ் உதவி கமிஷனர் இளமதி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., மணிவண்ணன் பரிசுகள் வழங்கினர். திருநகர் ஹாக்கி கிளப் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.