உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 

 துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் துாய்மை பாரதம் சிறப்பு பிரசாரம் டிச.16 முதல் 31 வரை நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாரமாக துாய்மை விழிப்புணர்வு உறுதிமொழி, வீணாகும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை அழகுச் செடி வளர்ப்பிற்கு பயன்படுத்துதல், தோட்டங்கள், குடியிருப்புகள், அலுவலக சுற்றுப்புறங்களை துாய்மை செய்தல் கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து விவசாயிகள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 5 வயது குழந்தைக்கான காய்கறிகள் முக்கியத்துவம் குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. துாய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அருளரசு, நிர்மலா, ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ