மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான தடகளவிளையாட்டு போட்டிகள்
02-Sep-2025
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அக். 2 முதல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவிலான சி.எம்.ட்ராபி தடகளப் போட்டிகள் துவங்க உள்ளன. அக்., 2 முதல் 4 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அக்., 5 முதல் 7 வரை கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கும் தடகளப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கின்றன. அக். 8 முதல் 12 வரை கல்லுாரி மாணவிகளுக்கும் அக்., 10 முதல் 14 வரை கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. மதுரைக் கல்லுாரி, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, வீரபாஞ்சான் சோலைமலை பொறியியல் கல்லுாரி வளாகத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
02-Sep-2025