மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி
19-Dec-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் டிச.18ல் நடந்தது. மாணவர் விடுதி, மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் தனது வீடு உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் நுாலகம் அருகே உள்ளது. அப்பகுதியில் 3 மாதமாக மழை நீர் தேங்குவதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.நேற்று காலை உத்தப்பநாயக்கனுார் ஆவின் பால் குளிரூட்டு மையம், போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு குறித்து ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
19-Dec-2024