மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் மோதிய பஸ்
27-Oct-2025
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜன்பட்டி பூண்டி விலக்கு அருகே தனியார் கல்லுாரி பஸ் மாணவர்களுடன் நேற்று காலை சென்றது. கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது மோதி, அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. பஸ்சின் ஸ்டியரிங் ராடு உடைந்ததால் விபத்து ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். கடையில் இருந்த ஆறுமுகம் என்பவரது கால்கள் துண்டாகின. காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்பன்திருப்பதி போலீசார் சமரசம் செய்தனர்.
27-Oct-2025